/உள்ளூர் செய்திகள்/தேனி/ குழந்தை தொழிலாளர்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு குழந்தை தொழிலாளர்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு
குழந்தை தொழிலாளர்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு
குழந்தை தொழிலாளர்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு
குழந்தை தொழிலாளர்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு
ADDED : ஜூன் 08, 2024 05:47 AM
தேனி: குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் - ஜூன் 12 கடைபிடிப்பதை முன்னிட்டுதேனி அன்னஞ்சி பகுதியில் உள்ள டெக்ஸ்டைல் மில்கள், பருப்பு மில் ஆகியவற்றில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குனர் அமர்நாத், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் மனுஜ் ஷ்யாம் ஷங்கர் தலைமையிலான அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினர்.இந்த ஆய்வில் மாவட்ட சிறார்கள் பாதுகாப்பு நல அலுவலர் விஜயலட்சுமி, சிறார் தொழிலாளர் சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் வழக்கறிஞர் போதுமணி, தொழிலாளர்கள் உதவி ஆய்வாளர்கள் உடனிருந்தனர். மூன்று தொழிற்சாலைகளிலும் குழந்தை தொழிலாளர்கள் இல்லை என கண்டறியப்பட்டது.
குழந்தை தொழிலாகளர் சட்ட விதிகளை மீறுவோருக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதமும், ஆறு மாதங்கள் முதல் இரண்டாண்டு வரை சிறை தண்டனை வழங்கப்படும் என தொழிற்சாலை உரிமையாளர்கள், நிர்வாகிகளிடம் தெரிவித்து, அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.