/உள்ளூர் செய்திகள்/தேனி/ தெருவில் குப்பை கொட்டிய மருத்துவமனைக்கு நோட்டீஸ் தெருவில் குப்பை கொட்டிய மருத்துவமனைக்கு நோட்டீஸ்
தெருவில் குப்பை கொட்டிய மருத்துவமனைக்கு நோட்டீஸ்
தெருவில் குப்பை கொட்டிய மருத்துவமனைக்கு நோட்டீஸ்
தெருவில் குப்பை கொட்டிய மருத்துவமனைக்கு நோட்டீஸ்
ADDED : ஜூன் 30, 2024 05:34 AM
தேனி : தேனி டி.எஸ்.பி., அலுவலகம் பென்னிகுவிக் நகர் அருகே அமைந்துள்ளது.
இந்த அலுவலகத்தின் அருகே குடியிருப்புகள், அரசு மாணவர் விடுதி, கடைகள் அமைந்துள்ளன. டி.எஸ்.பி., அலுவலகத்திற்கு அருகே இரவில் சிலர் குப்பை கொட்டி அதை தீ வைத்து சென்றனர். அதில் மருத்துவமனையில் பயன்படுத்திய மாத்திரை, மருந்து அட்டைகள், மருந்து சீட்டுகள் கிடந்தன. அப்பகுதியினர் தெருவில் மருத்துவமனை குப்பை கிடப்பதாக நகராட்சிக்கு தகவல் தெரிவித்தனர். நகர்நல அலுவுலர் கவிப்பிரியா நடவடிக்கைக்கு உத்தரவிட்டார். அவர் கூறுகையில் மருத்துவ கழிவுகள் ஏதும் கொட்டவில்லை. காகிதம், அட்டைகள் தான் கொட்டப்பட்டிருந்தது. பொது இடத்தில் குப்பை கொட்டிய தனியார் மருத்துவமனைக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளோம் என்றனர்.