Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ இயற்கை வளத்தை பாதுகாக்க தேனியில் புதிய அமைப்பு துவக்கம்

இயற்கை வளத்தை பாதுகாக்க தேனியில் புதிய அமைப்பு துவக்கம்

இயற்கை வளத்தை பாதுகாக்க தேனியில் புதிய அமைப்பு துவக்கம்

இயற்கை வளத்தை பாதுகாக்க தேனியில் புதிய அமைப்பு துவக்கம்

ADDED : ஜூன் 12, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
தேனி : தேனி மாவட்டத்தில் இயற்கையை பாதுகாக்கும் நோக்கில் தேனி இயற்கை வரலாற்றுச் சங்கம் என்ற புதிய அமைப்பு துவக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டின் உலக சுற்றுச்சூழல் தின மையப் பொருளான, நில மறுசீரமைப்பு, வறட்சியை எதிர்க்கும் தன்மை, நமது நிலம் நமது எதிர்காலம்' என்ற முழக்கத்துடன் விழிப்புணர்வு ஏற்படுத்த மத்திய வனத்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி மாவட்ட வனத்துறை, மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனரகம், மாவட்ட நிர்வாகம் இணைந்து, தேனி இயற்கை வரலாற்றுச் சங்கம் என்ற புதிய அமைப்பு துவக்கப்பட்டது. இதனை கலெக்டர் ஷஜீவனா துவக்கி வைத்தார். நிகழ்வில் எஸ்.பி., சிவபிரசாத், டி.ஆர்.ஓ., ஜெயபாரதி, மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் ஆனந்த், மாவட்ட வன அலுவலர் சமர்த்தா, தமிழ்நாடு வன உயிரின வாரிய உறுப்பினர் டாக்டர் ராஜ்குமார் உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர். காட்டுத்தீ மேலாண்மை திட்டம்' குறித்த நுால் வெளியிடப்பட்டது. இந்த அமைப்பின் மூலம் வனவள பாதுகாப்பு, வனத்தின் அவசியம், நீர் மேலாண்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us