ADDED : ஆக 06, 2024 05:34 AM
தேவதானப்பட்டி: பெரியகுளம் அருகே சங்கரமூர்த்திபட்டி காளியம்மன் கோயில் தெரு சேகர் 49.
இவர் பெரியகுளம் நீர்வள ஆதார துறையில் தற்காலிகமாக பணிபுரிந்து வருகிறார். சங்கரமூர்த்திபட்டியைச் சேர்ந்த இவரது அண்ணன் மகன் ராஜபாண்டி 30. தினமும் மதுபோதையில் அவதூறாக பேசினார். இந்நிலையில் சேகரின் மனைவியை அவதூறாக பேசியுள்ளார். இதனை சேகர் கண்டித்தார். இதில் ஏற்பட்ட தகராறில் சித்தப்பா சேகரின் கழுத்தை நெரித்தும், கம்பால் அடித்து,ராஜபாண்டி கொலை மிரட்டல் விடுத்தார். பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சேகர் அனுமதிக்கப்பட்டார். ஜெயமங்கலம் போலீசார் ராஜபாண்டியை தேடி வருகின்றனர்.
--