ADDED : ஆக 03, 2024 05:13 AM
பெரியகுளம்: பெரியகுளம் தென்கரை மாரியம்மன் சன்னதி தெருவைச் சேர்ந்தவர் நாட்ராஜன் 42. இவரது மனைவி சூர்யா 31. இரு பிள்ளைகள் உள்ளனர். நாட்ராஜன் தனியார் கம்பெனி பஸ் டிரைவர். சில தினங்களுக்கு முன்பு டூவீலரில் இருந்து விழுந்ததில் காயமடைந்தார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இரு தினங்களுக்கு முன்பு தலைவலியால் அவதிப்பட்ட நாட்ராஜன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் இறந்தார். தென்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.-