/உள்ளூர் செய்திகள்/தேனி/ வி.ஏ.ஓ., ஆபீஸ்களுக்கு நிவாரணநிதி ஒதுக்கீடு வி.ஏ.ஓ., ஆபீஸ்களுக்கு நிவாரணநிதி ஒதுக்கீடு
வி.ஏ.ஓ., ஆபீஸ்களுக்கு நிவாரணநிதி ஒதுக்கீடு
வி.ஏ.ஓ., ஆபீஸ்களுக்கு நிவாரணநிதி ஒதுக்கீடு
வி.ஏ.ஓ., ஆபீஸ்களுக்கு நிவாரணநிதி ஒதுக்கீடு
ADDED : ஜூன் 28, 2024 01:19 AM
மூணாறு: இடுக்கி மாவட்டத்தில் நிவாரண பணிகள் செய்ய வி.ஏ.ஓ., அலுவலகங்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.17 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டதாக கலெக்டர் ஷீபாஜார்ஜ் தெரிவித்தார்.
இடுக்கி மாவட்டத்தில் மழையால் பாதிப்புகள் ஏற்படும்பட்சத்தில் நிவாரண பணிகள் செய்ய வி.ஏ.ஓ., அலுவலங்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் நிதி ஒதுக்கப்பட்டது.
அந்த நிதியை நிவாரண பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்டோருக்கு சிற்றுண்டி வழங்குதல், முகாம் அமைத்தல், சாய்ந்த மரங்களை அகற்றுதல் உள்பட முக்கிய தேவைகளுக்கு செலவிடலாம். மாவட்டத்தில் 68 கிராம நிர்வாக அலுவலகங்கள் உள்ளன. அவற்றிற்கு ரூ.17லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் ஷீபாஜார்ஜ் தெரிவித்தார்.