/உள்ளூர் செய்திகள்/தேனி/ கருவேலங் காடாக மாறும் தாமரைக்குளம் கண்மாய் கருவேலங் காடாக மாறும் தாமரைக்குளம் கண்மாய்
கருவேலங் காடாக மாறும் தாமரைக்குளம் கண்மாய்
கருவேலங் காடாக மாறும் தாமரைக்குளம் கண்மாய்
கருவேலங் காடாக மாறும் தாமரைக்குளம் கண்மாய்
ADDED : ஜூலை 20, 2024 12:19 AM
உத்தமபாளையம் : உத்தமபாளையம் தாமரைகுளம் கண்மாய் கருவேலங்காடாக மாறி வருகிறது. 50 சதவீத பகுதிகள் காடாக மாறி விட்டதால் தண்ணீர் தேக்க முடியாத நிலை எழுந்துள்ளது.
உத்தமபாளையத்தில் தாமரைக்குளம் கண்மாய், குப்பிசெட்டிகுளம் கண்மாய் உள்ளிட்ட பாசனத்திற்கு பயன்படும் முக்கிய கண்மாய்கள் உள்ளன . இதில் தாமரைகுளம் கண்மாய், 55 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். சுருளி அருவிக்கு செல்லும் ரோட்டில் கோகிலாபுரத்தையும், ராமசாமி நாயக்கன்பட்டியையும் இணைக்கிறது. இந்த கண்மாயில் கணிசமான பகுதி ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் உள்ளது.
மீதமுள்ள பகுதியில் நீர்வளத்துறை தூர் வாராததால் கருவேல மரங்கள் வளர்ந்து, அடர்ந்த கருவேலங் காடாக மாறி உள்ளது.
அத்துடன் ஆகாயத்தாமரயும் வளர்ந்து தண்ணீர் தேங்கும் பரப்பை சுருக்கி வருகிறது. இதனால் உத்தமபாளையம் பரவு பகுதியில் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் பாதிக்கபடுகின்றனர். காணாமல் போகும் இந்த கண்மாயை தூர்வாரி, முழு அளவில் தண்ணீர் தேக்க நீர்வளத்துறையினர் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.