ADDED : ஜூலை 27, 2024 06:31 AM
தேனி: தேனி நாடார் சரஸ்வதி கலை அறிவியல் கல்லுாரி கணினி அறிவியல் துறையின் சார்பில், செயற்கை நுண்ணறிவு கருவிகளை உருவாக்குவதற்கான பயிற்சி முகாம் துவங்கியது.
உறவின்முறைத் தலைவர் ராஜமோகன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் கணேஷ், பொதுச் செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் முன்னிலை வகித்தனர். மாணவி அனிஸ்பாத்திமா வரவேற்றார். கல்லுாரிச் செயலாளர் காசிபிரபு, இணைச் செயலாளர்கள் அருண், செண்பகராஜன், முதல்வர் சித்ரா, துணை முதல்வர்கள் கோமதி, சுசீலா, சரண்யா, உமாகாந்தி, கிருஷ்ணவேனி ஆகியோர் வாழ்த்தினர். சிறப்பு விருந்தினரான கோவை எஸ்.என்.எஸ்., பொறியியல் கல்லுாரி உதவி பேராசிரியர் ஹரிகிருஷ்ணன், ‛செயற்கை நுண்ணறிவு கருவிகள் குறித்து பேசினார்.மாணவி மலர்விழி நன்றி தெரிவித்தார்.