/உள்ளூர் செய்திகள்/தேனி/ 50 பவுன் கொள்ளை சம்பவம் 15 கேமரா பதிவுகள் ஆய்வு 50 பவுன் கொள்ளை சம்பவம் 15 கேமரா பதிவுகள் ஆய்வு
50 பவுன் கொள்ளை சம்பவம் 15 கேமரா பதிவுகள் ஆய்வு
50 பவுன் கொள்ளை சம்பவம் 15 கேமரா பதிவுகள் ஆய்வு
50 பவுன் கொள்ளை சம்பவம் 15 கேமரா பதிவுகள் ஆய்வு
ADDED : ஜூன் 20, 2024 05:20 AM
பெரியகுளம்: பெரியகுளம் சஸ்பெண்ட் தாசில்தார் வீட்டில் நடந்த 50 பவுன் நகை கொள்ளையில் ஈடுபட்டவர்கள் குறித்து 15 சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
பெரியகுளம் தென்கரை பாரதிநகரை சேர்ந்த அரசு நிலஅபகரிப்பு வழக்கில் சஸ்பெண்ட் ஆன மண்டல துணை தாசில்தார் மோகன்ராம் 48. சென்னைக்கு குடும்பத்துடன் சென்று விட்டு வீடு ஜுன் 17 இரவு வீடு திரும்பினார். வீட்டில் கதவுகள், பீரோக்கள் உடைக்கப்பட்டு ரூ. 25 லட்சம் மதிப்பிலான 50பவுன் தங்க நகைகள், ரூ. 75 ஆயிரம் பணத்தையும் வீட்டில் சிசிடிவி கேமரா ஹார்ட்டிஸ்க் கையும் கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
புகாரில் தென்கரை இன்ஸ்பெக்டர் வெள்ளையப்பன் தலைமையில் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். போலீஸ் முதல்கட்ட விசாரணையில், பாரதிநகரில் பிற வீடுகளில் கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் ஒரு டூவீலரில் இருவர் ஹெல்மெட் அணிந்தும், சர்ட், பேண்ட் அணிந்திருந்தனர் என தெரிய வந்துள்ளது. கொள்ளையர்களை உறுதி செய்ய 15 இடங்களில் கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.