ADDED : மார் 14, 2025 06:18 AM
சின்னமனூர்: சின்னமனூர் அருகே கரிச்சிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முப்பெரும் விழா நடந்தது.அப்பி பட்டி ஊராட்சி முன்னாள் தலைவர் பாண்டியராஜ் தலைமை வகித்தார்.
வட்டார வள மைய மேற்பார்வையாளர் சகாயராஜ், முன்னிலை வகித்தார். பட்டதாரி ஆசிரியர் கண்ணன் வரவேற்றார். தலைமையாசிரியை மகாலட்சுமி ஆண்டறிக்கை வாசித்தார். எழுத்தாளர் ராமகிருஷ்ணன், டாக்டர் ரத்தினம் பேசினார், கரிச்சிபட்டி கருப்பையா நினைவு அறக்கட்டளை சார்பாக மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நல்லாசிரியர் விருது பெற்ற ராமகிருஷ்ணன், கண்ணன், பணி நிறைவு பெறும் தலைமையாசிரியை மகாலட்சுமி ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஆசிரியர் வடிவேலு நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஆசிரியைகள் அகிலா, கார்த்திகை செல்வி, முத்துச் செல்வி செய்திருந்தனர்.