Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/ டூ--வீலர்கள் மோதல் 2 வாலிபர்கள் மரணம்

டூ--வீலர்கள் மோதல் 2 வாலிபர்கள் மரணம்

டூ--வீலர்கள் மோதல் 2 வாலிபர்கள் மரணம்

டூ--வீலர்கள் மோதல் 2 வாலிபர்கள் மரணம்

ADDED : மே 24, 2025 08:21 PM


Google News
Latest Tamil News
தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே புதுப்பட்டினத்தைச் சேர்ந்தவர் தினேஷ், 21. நேற்று முன்தினம் இரவு, தன் நண்பர் விஸ்வா, 23, என்பவருடன் பட்டுக்கோட்டையில் இருந்து புதுப்பட்டினம் நோக்கி டூ-வீலரில் சென்றார். தினேஷ் ஓட்டினார்.

பட்டுக்கோட்டை தச்ச தெருவைச் சேர்ந்த சாமுவேல், 19, அவரது நண்பர் நிஷாந்த், 20, இருவரும் டூ-வீலரில், அதிராம்பட்டினத்தில் இருந்து பட்டுக்கோட்டை நோக்கி வந்தனர். சாமுவேல் ஓட்டினார்.

செண்டாக்கோட்டை அருகே அதிக வேகமாக வந்த இரு டூ-வீலர்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில், தினேஷ், சாமுவேல் இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். படுகாயமடைந்த விஸ்வா, நிஷாந்த், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். அதிராம்பட்டினம் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us