/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/கொள்ளையர்களை தேடிய போலீஸ் விபச்சார கும்பலை சுற்றிவளைத்ததுகொள்ளையர்களை தேடிய போலீஸ் விபச்சார கும்பலை சுற்றிவளைத்தது
கொள்ளையர்களை தேடிய போலீஸ் விபச்சார கும்பலை சுற்றிவளைத்தது
கொள்ளையர்களை தேடிய போலீஸ் விபச்சார கும்பலை சுற்றிவளைத்தது
கொள்ளையர்களை தேடிய போலீஸ் விபச்சார கும்பலை சுற்றிவளைத்தது
ADDED : பிப் 25, 2024 12:45 AM
தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே புளியம்பேட்டையைச் சேர்ந்த தம்பதி உதயசந்திரன், 33, வேம்பு, 27. இவர்கள் வீட்டில் பிப்., 18ல் முகமூடி அணிந்த கும்பல் புகுந்து தம்பதியை தாக்கி, 10 சவரன் நகை, மொபைல் போன் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பியது.
திருவிடைமருதுார் போலீசார் கொள்ளையர்களை தேடினர். கொள்ளை போன வேம்புவின் மொபைல் போன் எண் இருப்பிடத்தை ஆய்வு செய்த போது, அந்த எண்ணில் இருந்து, தஞ்சாவூர், பர்மா காலனி வித்யா என்பவர் பேசியிருப்பது தெரிந்தது. தொடர் விசாரணையில், வித்யா ஏற்பாடில் கொள்ளை நடந்தது தெரிந்து, போலீசார் அவரை பிடித்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், வித்யா, வேம்பு சேர்ந்து, பாலியல் தொழிலில் ஈடுபட்டதும், வாட்ஸாப் குழு ஒன்றை உருவாக்கி, தமிழகம் முழுதும் இத்தொழில் நடத்தியது தெரிந்தது.
இந்நிலையில், அய்யம் பேட்டையைச் சேர்ந்த ஒருவர் வித்யா வாயிலாக வேம்புவை கொடைக்கானல் அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்துஉள்ளார்.
அப்போது அந்த நபரிடம் பணம் பறிக்க திட்டமிட்ட வேம்பு, உதயசந்திரனை அங்கு வரவழைத்து, தன்னுடன் அந்த நபர் உல்லாசமாக இருப்பதை ரகசியமாக வீடியோ எடுத்துள்ளனர். பின், அதைக் காட்டி அவரை மிரட்டி, 8 லட்சம் ரூபாய் பணம் பறித்துள்ளனர்.
வித்யாவிடம் அந்த நபர் முறையிடவே, வித்யா அந்த வீடியோவை தன்னிடம் ஒப்படைக்க வேம்புவிடம் கேட்க, அவர் மறுத்துள்ளார்.
இதையடுத்து, வித்யா, தஞ்சாவூர் பர்மா காலனியை சேர்ந்த பாலகுரு உள்ளிட்ட எட்டு பேரை ஏற்பாடு செய்து, வேம்பு வீட்டில் பணத்தை கொள்ளையடித்துள்ளார். வித்யா, வேம்பு, உதயசந்திரனுடன், கொள்ளை கும்பலையும் போலீசார் கைது செய்துள்ளனர்.