/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/ குழந்தைகளை ஆற்றில் வீசி இறந்த அக்கா, தங்கை குழந்தைகளை ஆற்றில் வீசி இறந்த அக்கா, தங்கை
குழந்தைகளை ஆற்றில் வீசி இறந்த அக்கா, தங்கை
குழந்தைகளை ஆற்றில் வீசி இறந்த அக்கா, தங்கை
குழந்தைகளை ஆற்றில் வீசி இறந்த அக்கா, தங்கை
ADDED : செப் 11, 2025 03:23 AM
தஞ்சாவூர்:வாழ்க்கையில் ஏற்பட்ட விரக்தியால் அக்கா, தங்கை, குழந்தைகளை ஆற்றில் வீசி தற்கொலை செய்து கொண்டனர்.
தஞ்சாவூர், பூச்சந்தை அருகே, கல்லணை கால்வாயின், 20 கண் பாலத்தில் நேற்று முன்தினம், கைக்குழந்தை, 5 வயது சிறுவனை ஆற்றில் வீசி விட்டு, இரண்டு பெண்கள் ஆற்றில் குதித்தனர்.
சிறுவனும், இரண்டு பெண்களும் சடலமாக மீட்கப்பட்டனர். கைக்குழந்தை ஆற்றில் அடித்து செல்லப்பட்டது. உடல் இன்னும் கிடைக்கவில்லை.
தஞ்சாவூர் தாலுகா போலீசார் நடத்திய விசாரணையில், தஞ்சாவூர், பொட்டுவாச்சாவடி, யாகப்பா நகரைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி, 30. இவரது கணவர் விஜயராகவன், சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இந்த தம்பதிக்கு ஹரிஷ், 5, என்ற மகன் இருந்தார்.
ராஜேஸ்வரியின் தங்கை துர்காதேவி, 27, கார்த்திக் என்பவரை காதல் திருமணம் செய்தார். கர்ப்பமான நிலையில், இவரது கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார். அக்கா, தங்கை இருவரும் தந்தையுடன் வசித்தனர்.
இந்நிலையில், 10 நாட்களுக்கு முன், துர்காதேவிக்கு குழந்தை பிறந்தது. வாழ்க்கை சரியாக அமையாத விரக்தியில் ராஜேஸ்வரி, துர்காதேவி இருவரும் சிறுவன் ஹரிஷ் மற்றும் பிறந்த 10 நாளான குழந்தையை ஆற்றில் வீசி, தற்கொலை செய்தது தெரிந்தது.
மேலும், ராஜேஸ்வரி, தன் மகன் ஹரிஷுக்கு புது சட்டை, செருப்பு, கண்ணாடி அணிந்து, தின்பண்டம் வாங்கி கொடுத்து, ஆற்றுக்கு அழைத்து வந்து ஆற்றில் வீசியது, பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.