/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/எஸ்.சி. வாலிபரை மணம் புரிந்த மகளை கொலை செய்து எரித்த பெற்றோர் கைதுஎஸ்.சி. வாலிபரை மணம் புரிந்த மகளை கொலை செய்து எரித்த பெற்றோர் கைது
எஸ்.சி. வாலிபரை மணம் புரிந்த மகளை கொலை செய்து எரித்த பெற்றோர் கைது
எஸ்.சி. வாலிபரை மணம் புரிந்த மகளை கொலை செய்து எரித்த பெற்றோர் கைது
எஸ்.சி. வாலிபரை மணம் புரிந்த மகளை கொலை செய்து எரித்த பெற்றோர் கைது
ADDED : ஜன 11, 2024 01:47 AM

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே, நெய்வவிடுதி கிராமத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இனத்தை சேர்ந்த பெருமாள், 50, ரோஜா, 45, தம்பதியின் மகள் ஐஸ்வர்யா, 19.
அருகில் உள்ள கிராமமான பூவாளூரில் வசிக்கும் பட்டியலினத்தை சேர்ந்த பாஸ்கர் மகன் நவீன், 19, என்ற டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தவரும், டிச., 31ல் திருப்பூர் அருகே திருமணம் செய்தனர்.
பல்லடம் அருகே வாடகை வீட்டில் அவர்கள் வசித்த போது, மகளை காணவில்லை என, பல்லடம் போலீசில் ஐஸ்வர்யாவின் தந்தை பெருமாள், தாய் ரோஜா புகார் அளித்தனர்.
கடந்த 2ம் தேதி, பல்லடம் போலீசார், ஐஸ்வர்யா - நவீன் தங்கியிருந்த இடத்தை கண்டுபிடித்து, ஐஸ்வர்யாவை மட்டும் பெற்றோருடன் அனுப்பினர்.
மறுநாள், ஐஸ்வர்யா துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறி, அவசர அவசரமாக அவரது உடலை எரித்தனர். இந்நிலையில், சில தினங்களுக்கு முன், ஐஸ்வர்யாவின் பெற்றோர், அவரை துன்புறுத்தும் வீடியோ வெளியானது.
இதையடுத்து, கடந்த 7ம் தேதி, வாட்டாத்திக்கோட்டை போலீசில், ஐஸ்வர்யாவை அடித்து, துன்புறுத்தி கொலை செய்து, எரித்து விட்டதாக நவீன் புகார் அளித்தார்.
போலீசார் விசாரணை நடத்தியதில், ஐஸ்வர்யாவை பெற்றோர் மற்றும் உறவினர்கள் சேர்ந்து அந்த பெண்ணை அடித்துக் கொன்றது உறுதியானது. விசாரணைக்கு பின் நேற்று, பெருமாள், ரோஜா ஆகியோரை கைது செய்து, பட்டுக்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.
வழக்கை விசாரித்த நீதிபதி சத்யா இருவரையும், 15 நாள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
பெருமாள் மற்றும் உறவினர்கள் சிலர், ஐஸ்வர்யாவை அடித்து, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது போல நாடகமாடியதாக கூறப்படுகிறது. பின், அந்த பெண் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது போல, பிறரை நம்ப வைத்து எரித்ததும் தெரிய வந்துள்ளது.