/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/ வாலிபர் வெட்டிக்கொலை 8 பேரை தேடுது போலீஸ் வாலிபர் வெட்டிக்கொலை 8 பேரை தேடுது போலீஸ்
வாலிபர் வெட்டிக்கொலை 8 பேரை தேடுது போலீஸ்
வாலிபர் வெட்டிக்கொலை 8 பேரை தேடுது போலீஸ்
வாலிபர் வெட்டிக்கொலை 8 பேரை தேடுது போலீஸ்
ADDED : செப் 10, 2025 03:36 AM
தஞ்சாவூர்:தஞ்சாவூரில், பட்டப்பகலில் வாலிபர் வெட்டி கொல்லப்பட்ட சம்பவத்தில், 8 பேரை போலீசார் தேடுகின்றனர்.
தஞ்சாவூர், தில்லை நகரை சேர்ந்த திலகன், 22, என்பவருக்கும், பாத்திமா நகரை சேர்ந்த சக்தி, 23, என்பவருக்கும் முன் விரோதம் இருந்தது. திலகன் நண்பரான சசிகுமார், 21, நேற்று முன்தினம், சக்தியிடம் தகராறு செய்துள்ளார்.
மீண்டும், நேற்று காலை, திலகன், சசிகுமார் இருவரையும் சூர்யா என்பவர், சக்தியிடம் பேச்சு நடத்த அழைத்து சென்றார். கலைஞர் நகரில் சென்ற போது, சக்தி, அவரது தம்பி கோகுல், 21, பிரபா உட்பட, 8 பேர் அவர்களை அரிவாளா ல் வெட்டினர்.
இதில், தலை, கழுத்து பகுதிகளில் காயமடைந்த சசிகுமார், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். திலகன், சூர்யா தப்பினர். விசாரணையில், சில ஆண்டுக்கு முன், ஆட்டோ ஓட்டிய சக்தி தரப்புக்கும், சசிகுமார் தரப்புக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இதில், திலகனுக்கு ஆதரவாக சசிகுமார் பேசியதால், சக்தி தரப்பினர் வெட்டி கொலை செய்தது தெரிந்தது. தாலுகா போலீசார், வழக்கு பதிந்து, 8 பேரை தேடுகின்றனர்.