/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/வேன் டயர் வெடித்து புது மாப்பிள்ளை பலிவேன் டயர் வெடித்து புது மாப்பிள்ளை பலி
வேன் டயர் வெடித்து புது மாப்பிள்ளை பலி
வேன் டயர் வெடித்து புது மாப்பிள்ளை பலி
வேன் டயர் வெடித்து புது மாப்பிள்ளை பலி
ADDED : ஜன 31, 2024 12:59 AM
தஞ்சாவூர்:திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் பண்டிகை சோழநல்லுார் கிராமத்தை சேர்ந்த 21 பேர், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே ஊரணிபுரத்தில் துக்க நிகழ்வுக்கு வேனில் சென்றனர்.
பட்டுக்கோட்டை அருகே சூரப்பள்ளம் அருகே, பின்பக்க டயர் வெடித்து, டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரத்தில் கவிழ்ந்தது.
கிராம மக்கள் திரண்டு, விபத்தில் சிக்கியவர்களை மீட்டு, ஆம்புலன்ஸ் வாயிலாக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில், சண்முகசுந்தரம்,32, என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு மூன்று மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. இந்த விபத்தில் 20 பேரும் பட்டுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.