/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/ கர்நாடகா டூரிஸ்ட் வேன் - அரசு பஸ் நேருக்கு நேர் மோதலில் ஐந்து பேர் பலி கர்நாடகா டூரிஸ்ட் வேன் - அரசு பஸ் நேருக்கு நேர் மோதலில் ஐந்து பேர் பலி
கர்நாடகா டூரிஸ்ட் வேன் - அரசு பஸ் நேருக்கு நேர் மோதலில் ஐந்து பேர் பலி
கர்நாடகா டூரிஸ்ட் வேன் - அரசு பஸ் நேருக்கு நேர் மோதலில் ஐந்து பேர் பலி
கர்நாடகா டூரிஸ்ட் வேன் - அரசு பஸ் நேருக்கு நேர் மோதலில் ஐந்து பேர் பலி
ADDED : மே 22, 2025 03:01 AM

தஞ்சாவூர்:தஞ்சாவூர் - திருச்சி தேசிய நெஞ்சாலையில் அமைந்துள்ளது செங்கிப்பட்டி. இங்குள்ள உயர்மட்ட பாலத்தில் தார் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக, பாலத்தில், ஒருவழி பாதையாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தஞ்சாவூரில் இருந்து திருச்சி நோக்கி சென்ற அரசு பஸ்சும், கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து, தஞ்சாவூருக்கு சுற்றுலா வந்த டெம்போ டூரிஸ்ட் வேனும், நேற்று இரவு, 8:00 மணிக்கு நேருக்கு நேர் மோதின. இதில், டெம்போ டூரிஸ்ட் வேன் பலத்த சேதமடைந்தது.
இதையடுத்து, பஸ்சில் இருந்த பயணியர் அலறிய சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர், கர்நாடகா சுற்றுலா வேனில் பயண செய்தவர்களை மீட்டனர்.
வேனில், ஜான்சன், 20, ஜோசி, 20, தாசி, 7, ரியா, 13, பெலிக்கா, 13, வில்லியம், 50, என மொத்தம் 11 பேர் இருந்தனர்.
விபத்தில், இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தனர்.
மேலும், 108 ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு துாக்கி செல்லும் வழியில் பெங்களூரை சேர்ந்த தாஸ், 45, என்பவர் இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்தது.
இந்நிலையில், வேனில் வந்த மூன்று பெண்கள், குழந்தை, இரண்டு ஆண்கள் என மொத்தம் ஆறு பேர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், பஸ்சில் பயணம் செய்த, பரமேஸ்வரி, 52, பவித்ரா, 23, படுகாயமடைந்தனர்.