/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/ அரசு பஸ்சில் சக்கர நாற்காலியை ஏற்ற மறுத்த கண்டக்டர் 'சஸ்பெண்ட்' அரசு பஸ்சில் சக்கர நாற்காலியை ஏற்ற மறுத்த கண்டக்டர் 'சஸ்பெண்ட்'
அரசு பஸ்சில் சக்கர நாற்காலியை ஏற்ற மறுத்த கண்டக்டர் 'சஸ்பெண்ட்'
அரசு பஸ்சில் சக்கர நாற்காலியை ஏற்ற மறுத்த கண்டக்டர் 'சஸ்பெண்ட்'
அரசு பஸ்சில் சக்கர நாற்காலியை ஏற்ற மறுத்த கண்டக்டர் 'சஸ்பெண்ட்'
ADDED : மே 30, 2025 01:11 AM

தஞ்சாவூர்:சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், அரசு பஸ்சில் ஏறிய பெண் மாற்றுத்திறனாளியின் இரு சக்கர நாற்காலியை ஏற்ற மறுத்த கண்டக்டர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம், பத்மநாபன் தெருவைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி, 46; ஆசிரியர் பயிற்சி முடித்துள்ளார். தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் உரிமை திட்டத்தில், தற்காலிக பணியாளராக வேலை பார்த்து வருகிறார்.
மே 14ல், ராஜேஸ்வரி இடைநிலை ஆசிரியர் தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பிற்காக சென்னை சென்றிருந்தார். பணி முடிந்து, சென்னையில் இருந்து கும்பகோணம் செல்ல, தன் அண்ணன் சீனிவாசனுடன், கிளாம்பாக்கத்தில் அரசு பஸ்சில் ஏறியுள்ளார். ராஜேஸ்வரியை, சீனிவாசன் துாக்கி சென்று இருக்கையில் அமர வைத்துள்ளார்.
பின், சக்கர நாற்காலியை பஸ்சில் வைக்க முயன்றபோது, கண்டக்டர் மோகன், சக்கர நாற்காலியை வைக்க இடமில்லை எனக்கூறி, சீனிவாசனுடன் வாக்குவாதம் செய்து, இருவரையும் பஸ்சை விட்டு இறக்கி விட்டுள்ளார்.
ராஜேஸ்வரி, கும்பகோணம் போக்குவரத்து கழகத்திலும், மே 23ம் தேதி, கலெக்டர் பிரியங்கா பங்கஜத்திடமும் புகார் அளித்தார். புகார் குறித்து கலெக்டர் விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்க, கும்பகோணம் போக்குவரத்து கழகத்திற்கு உத்தரவிட்டார்.
கண்டக்டர் மோகனை நேற்று சஸ்பெண்ட் செய்து, கும்பகோணம் போக்குவரத்து கழக கோட்ட பொது மேலாளர் முத்துகுமாரசாமி உத்தரவிட்டார்.