/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/என் உடம்பில் ஓடுவது அ.தி.மு.க., ரத்தம் பன்னீர்செல்வம் ஆவேச பேச்சுஎன் உடம்பில் ஓடுவது அ.தி.மு.க., ரத்தம் பன்னீர்செல்வம் ஆவேச பேச்சு
என் உடம்பில் ஓடுவது அ.தி.மு.க., ரத்தம் பன்னீர்செல்வம் ஆவேச பேச்சு
என் உடம்பில் ஓடுவது அ.தி.மு.க., ரத்தம் பன்னீர்செல்வம் ஆவேச பேச்சு
என் உடம்பில் ஓடுவது அ.தி.மு.க., ரத்தம் பன்னீர்செல்வம் ஆவேச பேச்சு
ADDED : ஜன 31, 2024 01:00 AM
தஞ்சாவூர்:தஞ்சாவூரில், அ.தி.மு.க., தொண்டர்களின் உரிமை மீட்பு குழு ஆலோசனை கூட்டம் நடந்தது.
தலைமை வகித்த முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் பேசியதாவது:
அ.தி.மு.க.வின் இயக்கத்துக்கு தொண்டர்களும், தலைமை பொறுப்புக்கு வரலாம் என்ற கொள்கையின்படி, இந்த இயக்கத்தின் சட்ட விதிகளை எம்.ஜி.ஆர். உருவாக்கினார். அந்த விதியை, மெருகேற்றியவர் ஜெயலலிதா.
ஆனால், இருபெரும் தலைவர்கள் பாதுகாத்து வந்த கழகத்தின் விதியை காலில் போட்டு மிதித்தவர் பழனிசாமி. இந்த இயக்கத்தை கபளீகரம் செய்ய வேண்டும்; அழிக்க வேண்டும் என செயல்பட்டு கொண்டிருப்பவர் தான் பழனிசாமி.
எனவே, தான் தொண்டர்களின் உரிமையை மீட்க நாம் மாவட்டந்தோறும் இந்த கூட்டத்தை கூட்டி வருகிறோம். 2021ல் ஜெயலலிதா வெற்றி பெற்று அதன் மூலம் பழனிசாமிக்கு முதல்வர் பதவி கிடைத்தது.
ஆனால், பழனிசாமி தலைமை பொறுப்புக்கு வந்த பிறகு நடந்த எட்டு தேர்தல்களிலும், அ.தி.மு.க.,வுக்கு தோல்வி தான் கிடைத்தது.
பொதுச்செயலாளராக பழனிசாமி பொறுப்பேற்ற பிறகு நடந்த ஈரோடு இடைத் தேர்தலிலும் தோல்வியை தழுவினார். தொண்டர்களை மதிக்காமல் கட்சியை எப்படி வழிநடத்த முடியும்.
எனவே தான் நாம் வரும் தேர்தலுக்கு முன்பாக செய்ய வேண்டிய பூத் கமிட்டி உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பை வலுபடுத்தி வருகிறோம்.
தொண்டன் மீண்டும் அ.தி.மு.க.வின் தலைமை பொறுப்புக்கு வரும் வகையில், தர்மயுத்தத்தை நாம் துவங்கியுள்ளோம். இதற்கு தொண்டர்களும், பொதுமக்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால் நமக்கு புதுதெம்பு கிடைத்துள்ளது.
நீதிமன்றத்தின் தீர்ப்புகளால் கொடி, வேட்டி கட்டக்கூடாது என கூறியுள்ளீர்கள். ஆனால், எனது உடம்பில் ஓடும் ரத்தம் அ.தி.மு.க.வின் ரத்தம். அந்த ரத்தத்தை மாற்ற முடியாது.
எம்ஜிஆர் கூறிய ரத்தத்தின் ரத்தமே என்ற வார்த்தை தொண்டர்களுக்கான முழக்கம். அந்த தொண்டன் மீண்டும் தலைமை பொறுப்புக்கு வரும் காலம் தொலைவில் இல்லை.
இவ்வாறு அவர் பேசினார்.