/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/ டூ வீலர்கள் நேருக்கு நேர் மோதல் தாய், மகன் உட்பட மூவர் மரணம் டூ வீலர்கள் நேருக்கு நேர் மோதல் தாய், மகன் உட்பட மூவர் மரணம்
டூ வீலர்கள் நேருக்கு நேர் மோதல் தாய், மகன் உட்பட மூவர் மரணம்
டூ வீலர்கள் நேருக்கு நேர் மோதல் தாய், மகன் உட்பட மூவர் மரணம்
டூ வீலர்கள் நேருக்கு நேர் மோதல் தாய், மகன் உட்பட மூவர் மரணம்
UPDATED : ஜூலை 19, 2024 05:43 PM
ADDED : ஜூலை 19, 2024 05:01 PM

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் அருகே விக்ரமம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ராதிகா, 30. இவர்களின் மகன் மோனிஷ், 9. காலை, 10:30 மணிக்கு, ஸ்கூட்டரில், ராதிகா தன் மகன் மோனிஷை அழைத்துக்கொண்டு பரவாக்கோட்டையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது, கீழக்குறிச்சி அருகே சென்ற போது, மதுக்கூரில் இருந்து மன்னார்குடி நோக்கி சென்ற தனியார் பஸ்சை, ராதிகா முந்த முயன்றார். சாலையின் எதிர்புறம், திருவாரூர் மாவட்டம், பைங்காநாடு பகுதி விக்னேஷ், 18, பல்சர் பைக்கில் மதுக்கூருக்கு வந்து கொண்டிருந்தார்.
இதில், ராதிகா, விக்னேஷ் இருவரின் வாகனங்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. விபத்தில் ராதிகா, மோனிஷ், விக்னேஷ் மூவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மதுக்கூர் போலீசார் மூவரின் உடல்களையும் மீட்டு, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விக்னேஷ் கும்பகோணம் தனியார் கல்லுாரியில் பி.எஸ்.சி., முதலாம் ஆண்டு படித்து வந்தார்.