/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/ 15 வயது சிறுவன் ஓட்டிய டூ - வீலர் மோதி முதியவர் பலி 15 வயது சிறுவன் ஓட்டிய டூ - வீலர் மோதி முதியவர் பலி
15 வயது சிறுவன் ஓட்டிய டூ - வீலர் மோதி முதியவர் பலி
15 வயது சிறுவன் ஓட்டிய டூ - வீலர் மோதி முதியவர் பலி
15 வயது சிறுவன் ஓட்டிய டூ - வீலர் மோதி முதியவர் பலி
ADDED : ஜூலை 31, 2024 01:43 AM
தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லுார் அருகே சோழியவிளாகம் பகுதியை சேர்ந்த ராஜராமன்,77, விவசாயி. இவர் நேற்று முன்தினம் டி.வி.எஸ்., 50 டூ -- வீலரில், தன் வீட்டில் இருந்து பந்தநல்லுார் சென்று கொண்டு இருந்தார். அப்போது, பந்தல்லுார் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவன், 'பஜாஜ் பல்சர்' டூ - வீலரில், அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் ஓட்டி வந்தார். ராஜராமன் மீது டூ வீலர் மோதியதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் சிறுவனும் காயமடைந்தார்.
இதையடுத்து, அக்கம் பக்கத்தினர் ராஜராமனையும்,சிறுவனையும் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், ராஜராமன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காயமடைந்த சிறுவன் சிகிச்சை பெறுகிறார். இது குறித்து பந்தநல்லுார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விசாரணையில், விபத்தை ஏற்படுத்திய சிறுவன் 7ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள நிலையில், டிராக்டர்,டெம்போ ஓடும் வேலை செய்து வந்தார். இந்நிலையில், தான் வேலை பார்க்கும் இடத்தில் இருந்த டூ வீலரை எடுத்துக்கொண்டு பந்தநல்லுாருக்கு வந்த போது விபத்து நடந்தது தெரியவந்தது. இதனால் வாகன உரிமையாளர் மற்றும் பெற்றோர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.