Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/ தஞ்சாவூர் பெரிய கோயில் வாராஹி அம்மனுக்கு  விழா

தஞ்சாவூர் பெரிய கோயில் வாராஹி அம்மனுக்கு  விழா

தஞ்சாவூர் பெரிய கோயில் வாராஹி அம்மனுக்கு  விழா

தஞ்சாவூர் பெரிய கோயில் வாராஹி அம்மனுக்கு  விழா

ADDED : ஜூலை 06, 2024 02:48 AM


Google News
Latest Tamil News
தஞ்சாவூர்:தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான 88 திருக்கோயில்களுள் ஒன்றாகவும், உலக புகழ் பெற்ற கோயில்களில் ஒன்றாகவும் திகழ்வது தஞ்சாவூர் பெரிய கோயில். இக்கோயிலில் தனி சன்னிதியில் எழுந்தருளி வாராஹி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

இதையடுத்து 22வது ஆண்டாக வாராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி பெருவிழா நேற்று துவங்கி ஜூலை 15-ம் தேதி வரை நடைபெறுகிறது.

அதன்படி நேற்று மாலை 6:00 மணிக்கு வராஹி அம்மனுக்கு இனிப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. தொடர்ந்து இன்று மஞ்சள் அலங்காரம், 7-ம் தேதி குங்குமம் அலங்காரம், 8-ம் தேதி சந்தன அலங்காரம், 9-ம் தேதி தேங்காய்ப்பூ அலங்காரம், 10-ம் தேதி மாதுளை அலங்காரம், 11-ம் தேதி நவதானிய அலங்காரம், 12-ம் தேதி வெண்ணெய் அலங்காரம்,13-ம் தேதி கனிவகை அலங்காரம், 14-ம் தேதி காய்கறி அலங்காரம், 15-ம் தேதி புஷ்ப அலங்காரம் நடைபெறவுள்ளது.

ஆஷாட நவராத்திரி விழாவின் போது மாலை நேரத்தில் இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இறுதி நாளான 15-ம் தேதி வாராஹி அம்மன் வீதியுலா நடைபெறவுள்ளது. அப்போது, நாதஸ்வரம், கரகாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட வாண வேடிக்கையுடன் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே மற்றும் ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் கவிதா தலைமையில் கோயில் பணியாளர்கள், உபயதாரர்கள் இணைந்து செய்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us