/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/ திருடப்பட்ட திருமங்கையாழ்வார் சிலை இங்கிலாந்து மியூசியத்தில் கண்டுபிடிப்பு திருடப்பட்ட திருமங்கையாழ்வார் சிலை இங்கிலாந்து மியூசியத்தில் கண்டுபிடிப்பு
திருடப்பட்ட திருமங்கையாழ்வார் சிலை இங்கிலாந்து மியூசியத்தில் கண்டுபிடிப்பு
திருடப்பட்ட திருமங்கையாழ்வார் சிலை இங்கிலாந்து மியூசியத்தில் கண்டுபிடிப்பு
திருடப்பட்ட திருமங்கையாழ்வார் சிலை இங்கிலாந்து மியூசியத்தில் கண்டுபிடிப்பு
ADDED : ஜூன் 11, 2024 01:52 AM

- -நமது நிருபர்-
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சுந்தரப்பெருமாள் கோவில் கிராமத்தில் அமைந்துள்ள சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் உள்ள திருமங்கை ஆழ்வார் சிலை, 1957ம் ஆண்டு திருடு போனது. இது தொடர்பாக, 15-ம் நுாற்றாண்டு சிலையாகும். 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12ம் தேதி, சென்னை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சி.ஐ.டி.யில் புகார் மனு அளிக்கப்பட்டது. விசாரணையில், மர்ம நபர்கள் திருமங்கையாழ்வார் சிலையை திருடி விட்டு, பக்தர்களுக்கு சந்தேகம் வராமல் இருக்க போலி சிலையை வைத்தது தெரிந்தது.
இக்கோவிலில் திருடு போன உண்மையான சிலையின் படம், புதுச்சேரியில் உள்ள இந்தோ- - பிரெஞ்ச் இன்ஸ்டிடியூட்டில் இருந்து பெறப்பட்டு, போலி சிலையுடன் ஒப்பிடப்பட்டது. அத்துடன் அந்த உண்மையான சிலையை, இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உள்ள, அஷ்மோலியன் அருங்காட்சியக நிர்வாகம், 1967ம் ஆண்டு, சூத்பி ஏல மையத்தால் ஜே.ஆர்.பெல்மான்ட் என்ற சிலை சேகரிப்பாளரிடம் இருந்து ஏலம் எடுத்து அருங்காட்சியகத்தில் வைத்துள்ளது.
இந்நிலையில், இந்திய பிரைட் திட்டத்தின், தொல்பொருள் நிபுணர் விஜய்குமார், திருமங்கை ஆழ்வார் சிலை, தமிழகத்தில் இருந்து திருடப்பட்டது என்பதை உறுதி செய்து, அருங்காட்சியக நிர்வாகிகளிடம் தெரிவித்தார்.
இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் மற்றும் லண்டனில் உள்ள இந்திய உயர் ஆணையம், தமிழக சிலை தடுப்பு பிரிவு போலீஸ் ஆகியவை இணைந்து, சிலையை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு, முறைப்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதையடுத்து, அந்த சிலையை ஒப்படைக்க அஷ்மோலியன் அருங்காட்சியகம் விருப்பம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, அந்த சிலையை, இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இது குறித்து, இந்திய பிரைட் திட்டத்தின் தொல்பொருள் நிபுணர் விஜய்குமார் கூறியதாவது:
திருமங்கை ஆழ்வார் சிலை விஜயநகர காலத்து சிலையாகும். இச்சிலையை கொண்டு வர அருங்காட்சியம் நிர்வாக குழு ஒப்புதல் உள்ளது. 90 சதவீத செயல்பாடுகள் முடிந்து, இந்தியாவிற்கு விரைவில் வர ஏற்பாடு நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.