/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/ பாண்டி ஜூஸ் என்ற பெயரில் சாராய பாக்கெட் விற்பனை பாண்டி ஜூஸ் என்ற பெயரில் சாராய பாக்கெட் விற்பனை
பாண்டி ஜூஸ் என்ற பெயரில் சாராய பாக்கெட் விற்பனை
பாண்டி ஜூஸ் என்ற பெயரில் சாராய பாக்கெட் விற்பனை
பாண்டி ஜூஸ் என்ற பெயரில் சாராய பாக்கெட் விற்பனை
ADDED : ஜூன் 06, 2024 12:15 AM
தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம், திருவிடைமருதுார், பந்தநல்லுார் சுற்று வட்டாரங்களில் சாராயம் தயாரிக்கப்பட்டு, ஜூஸ் என்ற பெயரில் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் அப்பகுதியில் பல இடங்களில் சோதனை நடத்தினர். நேற்று அதிகாலை, நல்லதாடி கிராமத்தில் குளிர்பானம் விற்பனை செய்வது போல, 'பாண்டி ஜூஸ்' என்ற பெயரில் சாராயத்தை பாக்கெட்டுகளில் அடைத்து, விற்பனை செய்தது தெரிந்தது.
அந்த சாராய பாக்கெட்டுகளை விற்ற, நல்லதாடியைச் சேர்ந்த செல்வராஜ், 58, அவர் மகன் செல்வமணி, 29, ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.