/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/ சேதுபாவாசத்திரத்தில் கடல் அட்டை பறிமுதல் சேதுபாவாசத்திரத்தில் கடல் அட்டை பறிமுதல்
சேதுபாவாசத்திரத்தில் கடல் அட்டை பறிமுதல்
சேதுபாவாசத்திரத்தில் கடல் அட்டை பறிமுதல்
சேதுபாவாசத்திரத்தில் கடல் அட்டை பறிமுதல்
ADDED : ஜூலை 23, 2024 09:02 PM

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட, சேதுபாவாசத்திரம் கடற்கரைப் பகுதியில், அரிய வகை கடல் வாழ் உயிரினமான கடல் அட்டைகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின்படி, சேதுபாவாசத்திரம் கடலோர போலீஸ் இன்ஸ்பெக்டர் மஞ்சுளா தலைமையிலான போலீசார் சோதனை செய்தனர்.
சோதனையில், சேதுபாவாசத்திரம் பகுதியைச் சேர்ந்த நீலகண்டன், 50, என்பவர், 140 கடல் அட்டைகளை விற்பனைக்காக பதுக்கி வைத்து இருப்பதை கண்டுபிடித்தனர். 40 கிலோ எடையுள்ள அவற்றை பறிமுதல் செய்து, அவரை கடலோர போலீசார், பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலர் சந்திரசேகரனிடம் ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்ட அவர், புதுக்கோட்டை கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.