/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/குடமுருட்டி ஆற்றில் மணல் எடுப்பு விவசாயிகள் மீண்டும் போராட்டம்குடமுருட்டி ஆற்றில் மணல் எடுப்பு விவசாயிகள் மீண்டும் போராட்டம்
குடமுருட்டி ஆற்றில் மணல் எடுப்பு விவசாயிகள் மீண்டும் போராட்டம்
குடமுருட்டி ஆற்றில் மணல் எடுப்பு விவசாயிகள் மீண்டும் போராட்டம்
குடமுருட்டி ஆற்றில் மணல் எடுப்பு விவசாயிகள் மீண்டும் போராட்டம்
ADDED : ஜூலை 27, 2024 02:27 AM

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே கீழதிருப்பந்துருத்தி கிராமத்தில், குடமுருட்டி ஆற்றில் இருந்து இரண்டு நாட்களாக மணல் எடுத்து, கண்டியூரில் மணல் சேமிப்பு கிடங்கில் கொட்டி வைக்கின்றனர்.
காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க துணைச்செயலர் சுகுமாறன், கிராம மக்கள் ரமேஷ், கமலக்கண்ணன், ராஜா ஆகியோர் தலைமையில் விவசாயிகள், ஆற்றில் மணல் அள்ளிய பொக்லைன் இயந்திரங்களை தடுத்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கீழதிருப்பந்துருத்தி வி.ஏ.ஓ., அபிஷேக் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சு நடத்தினார்.
இதையடுத்து, மணல் அள்ளுவதை நிறுத்தி விட்டு, பொக்லைன் இயந்திரங்களை அங்கிருந்து எடுத்துச் சென்றதால் விவசாயிகள் கலைந்தனர்.
சுகுமாறன் கூறியதாவது:
குடமுருட்டி ஆற்றுப்பகுதியில் இரண்டு ஆண்டுகளாக அரசு பணிக்காகவும், ஆற்றில் தடுப்புச்சுவர்கள் கட்டுவதற்காக எனவும் கூறி இரவு, பகலாக மணல் அள்ளி வருகின்றனர்.
கலெக்டர் மற்றும் கனிம வளத்துறை அனுமதி இல்லாமல், நீர்வளத்துறை அலுவலர்கள் தனியாக உத்தரவுகளை போட்டு, அத்து மீறி மணல் கொள்ளை அடித்து வருகின்றனர்.
நீர்வளத் துறை அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏற்கனவே இப்பகுதியில் உள்ள பாசன வயல்களுக்கு படுக்கை அணை அமைத்தும் தண்ணீர் கிடைக்காத சூழல் உள்ளது.
இதில், பல கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளது. அத்துடன், நீர்வளத்துறை அதிகாரிகள் மணல் அள்ளுவதற்காக, கிராம மக்களை இரு பிரிவுகளாக பிரித்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சில நாட்களுக்கு முன் ஆற்றில் மணல் எடுத்ததை கண்டித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.