Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/ பழமையான ஆஞ்சநேயர் சிலை  5 ஆண்டுக்கு பின் பிரதிஷ்டை

பழமையான ஆஞ்சநேயர் சிலை  5 ஆண்டுக்கு பின் பிரதிஷ்டை

பழமையான ஆஞ்சநேயர் சிலை  5 ஆண்டுக்கு பின் பிரதிஷ்டை

பழமையான ஆஞ்சநேயர் சிலை  5 ஆண்டுக்கு பின் பிரதிஷ்டை

ADDED : ஜூன் 21, 2024 12:55 AM


Google News
Latest Tamil News
தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம் பட்டீஸ்வரத்தில், 1,000 ஆண்டுகள் பழமையான தேனுபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் மூலவரின் வலது பக்கத்தில், 300 ஆண்டுகளுக்கு முன், நாயக்கர் காலத்தில், 1 அடி உயர கருங்கல்லாலான ஆஞ்சநேயர் சிலை பதிக்கப்பட்டிருந்தது.

அந்த சிலையை, 2019ல் ஐந்து பேர், சாமி கும்பிடுவது போல நடித்து, திருடிச் சென்றனர். 2022ம் ஆண்டு, அந்த ஆஞ்சநேயர் சிலையை திருத்தணியைச் சேர்ந்த நீலகண்டன், வேலுாரைச் சேர்ந்த மணிகண்டன் ஆகியோர் வெளிநாட்டிற்கு கடத்துவதற்காக வைத்திருந்தனர்.

இதையறிந்த, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், இருவரையும் கைது செய்து சிலையை மீட்டனர்.

இந்த வழக்கு கும்பகோணம் சிலை திருட்டு தடுப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. மீட்கப்பட்ட ஆஞ்சநேயர் சிலையை கோவிலில் பிரதிஷ்டை செய்து வழிபட அனுமதி அளிக்க, கோவில் நிர்வாகம் சார்பில் மனு அளிக்கப்பட்டு இருந்தது. இதை விசாரித்த நீதிமன்றம் சிலையை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்த அனுமதி அளித்துள்ளது.

அதன்படி, ஐந்தாண்டுகளுக்குப் பின், ஆஞ்சநேயர் சிலையை அதே இடத்தில் பிரதிஷ்டை செய்து பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us