Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/ சூரியனார்கோவில் ஆதீனத்திற்கு சொந்தமான  ரூ.100 கோடி மதிப்பிலான சிலைகள் திருட்டு மடத்தை விட்டு வெளியேறிய மகாலிங்கசுவாமி பகீர் புகார் 

சூரியனார்கோவில் ஆதீனத்திற்கு சொந்தமான  ரூ.100 கோடி மதிப்பிலான சிலைகள் திருட்டு மடத்தை விட்டு வெளியேறிய மகாலிங்கசுவாமி பகீர் புகார் 

சூரியனார்கோவில் ஆதீனத்திற்கு சொந்தமான  ரூ.100 கோடி மதிப்பிலான சிலைகள் திருட்டு மடத்தை விட்டு வெளியேறிய மகாலிங்கசுவாமி பகீர் புகார் 

சூரியனார்கோவில் ஆதீனத்திற்கு சொந்தமான  ரூ.100 கோடி மதிப்பிலான சிலைகள் திருட்டு மடத்தை விட்டு வெளியேறிய மகாலிங்கசுவாமி பகீர் புகார் 

ADDED : மார் 14, 2025 01:30 AM


Google News
Latest Tamil News
தஞ்சாவூர்:சூரியனார்கோவில் ஆதீனத்திற்கு சொந்தமான, 100 கோடி ரூபாய் மதிப்பிலான சிலைகள் திருடு போய் விட்டதாகவும், தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும், திருமண சர்ச்சையில் சிக்கி, மடத்தை விட்டு வெளியேறிய மகாலிங்கசுவாமி, எஸ்.பி.,யிடம் நேற்று புகார் அளித்தார்.

தஞ்சாவூர் மாவட்டம், சூரியனார்கோவில் ஆதீனமாக, திருவாவடுதுறை ஆதீனத்தில் தம்பிரானாக இருந்த, ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பண்டார சுவாமிகள், 28வது குருமகா சன்னிதானமாக நியமிக்கப்பட்டு நிர்வாகம் செய்தார்.

இந்நிலையில், 54 வயதான இவர், கடந்த ஆண்டு அக்டோபரில் பெங்களூரைச் சேர்ந்த ஹேமாஸ்ரீ, 47, என்பவரை பதிவு திருமணம் செய்து கொண்டார்.

இதையடுத்து, சூரியனார்கோவில் ஆதீன ஸ்ரீ கார்யங்களில் ஒருவரான சுவாமிநாத சுவாமிகள், ஆதீனமாக பதவி வகிக்கும் தகுதியை மகாலிங்கசுவாமி இழந்து விட்டதாக தெரிவித்தார்.

மேலும், கடந்த ஆண்டு நவ., 12ம் தேதி, மகாலிங்கசுவாமி ஆதீன மடத்தில் இருந்து வெளியேற வேண்டும் என, கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அப்போது, சூரியனார்கோவில் ஆதீன நிர்வாக பொறுப்புகளை, அறநிலையத்துறையிடம் மகாலிங்கசுவாமி ஒப்படைத்தார். மேலும், 'முழு பொறுப்பையும் ஒப்படைக்கவில்லை. வேறு இடத்தில் போய் ஓய்வெடுக்க போகிறேன்' எனக்கூறி சென்றார்.

இந்நிலையில், நான்கு மாதங்களுக்கு பின், மகாலிங்கசுவாமி நேற்று தஞ்சாவூர் எஸ்.பி., ராஜாராமிடம் மனு ஒன்றை அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:

திருமங்கலகுடியை சேர்ந்த பாபு என்ற ரத்தினவேல், சூரியனார்கோவில் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் முருகன் மற்றும் சில சமூக விரோதிகள், சிலரின் துாண்டுதலில், என் மீது போலி விமர்சனம் செய்து, மானபங்கப்படுத்தி உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி, ஆதீனத்தை விட்டு வலுக்கட்டாயமாக துன்புறுத்தி அனுப்பி விட்டனர்.

இது ஏன் என்ற பதற்றத்தில் அப்போது எனக்கு புரியவில்லை. தற்போது தான் ஊர் மக்கள் கூறி, அதற்கான விடை கிடைத்திருக்கிறது.

மேலும், 500 ஆண்டுகளுக்கு மேலான பாரம்பரியமிக்க சிலைகள், விக்கிரகங்கள், விலை உயர்ந்த மரகதங்கள், படிகங்கள், நான் இல்லாத நேரத்தில் எடுத்துச் சென்று விட்டனர். இந்த புகாரை தீர விசாரித்து, தற்போதுள்ள சிலைகளை கார்பன் ஆய்வுக்கு உட்படுத்தி, சிலைகளின் உண்மை தன்மையை கண்டறிய வேண்டும்.

மேலும், என் உயிருக்கும், சூரியனார்கோவில் ஆதீன சொத்துக்கும் சமூக விரோதிகளால் ஆபத்து இருப்பதால், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு 24 மணி நேரமும் வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மகாலிங் சுவாமி கூறுகையில், ''நான் வடமாநில யாத்திரை சென்றிருந்தேன். ஆத்மார்த்த சுவாமிகள் படிக லிங்கம், ஒரு அடி உயரம் கொண்ட நந்தியம் பெருமான், நடராஜர் - சிவகாமசுந்தரி, முருகன் ஐம்பொன் சிலை என, 100 கோடி ரூபாய் அளவுக்கு சிலைகள் திருடு போயுள்ளன. மீண்டும் ஆதீனமாக தொடர உள்ளேன்,'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us