/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/ 'மேட்டூர் அணையை திறந்தால் ஏரி, குளங்களில் நீரை நிரப்புங்கள்' 'மேட்டூர் அணையை திறந்தால் ஏரி, குளங்களில் நீரை நிரப்புங்கள்'
'மேட்டூர் அணையை திறந்தால் ஏரி, குளங்களில் நீரை நிரப்புங்கள்'
'மேட்டூர் அணையை திறந்தால் ஏரி, குளங்களில் நீரை நிரப்புங்கள்'
'மேட்டூர் அணையை திறந்தால் ஏரி, குளங்களில் நீரை நிரப்புங்கள்'
ADDED : ஜூலை 26, 2024 10:40 PM
தஞ்சாவூர்:தஞ்சாவூர், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம், கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடந்தது. இதில், மூத்த வேளாண் வல்லுநர் குழுவினர் பழனியப்பன், கலைவாணன் ஆகியோர் விவசாயிகளிடம், மேட்டூர் அணை எப்போது திறக்க வேண்டும், எந்த மாதிரியான சாகுபடி முறையை பின்பற்ற வேண்டும் என எடுத்துரைத்தனர்.
அப்போது, கலைவாணன் கூறியதாவது: மே மாதமே எங்களது குழுவினர் சார்பில், மேட்டூர் அணையின் நீர் இருப்பு, தென்மேற்கு பருவமழையின் தொடக்கம், வானிலை ஆய்வு மையத்தின் தகவல் ஆகியவற்றை கணித்து ஆகஸ்ட் 15ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கலாம் என கூறினோம்.
தற்போது மேட்டூர் அணைக்கு நீர் வரத்து என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. விரைவில் அணை நிரம்பி மேட்டூர் அணை திறக்க வாய்ப்புள்ளது.
அவ்வாறு அணைகள் திறக்கப்பட்டால், மேட்டூர் அணையின் கொள்ளளவுக்கு நிகராக டெல்டா மாவட்டங்களில் உள்ள ஏரி, குளங்களில் தண்ணீரை சேமித்து வைக்கலாம்.
சம்பா சாகுபடிக்கு ஆகஸ்ட் மாதத்தில் முன்னேற்பாடு பணிகளை தொடங்கினாலும், ஆகஸ்ட் 15ம் தேதிக்கு பின்னர் விதைகளை விதைக்க வேண்டும். முன்கூட்டியே விதைகளை விதைத்தால், அந்த நெற்பயிர் பூ பூக்கும் தருணமான அக்டோபர் மாத வடக்கிழக்கு பருவமழையில் வீணாகி மகசூல் குறைய வாய்ப்புள்ளது.
விவசாயிகள் பெரும்பாலும் நேரடி நெல் விதைப்பு முறையை பின்பற்றினால் நடவு வரை ஏக்கருக்கு 8,000 ரூபாய் வரை மிச்சப்படுத்தலாம் இவ்வாறு அவர் தெரிவித்தார்.