/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/ ரேட்டிங் கொடுத்தால் லாபம் என டாக்டரிடம் ரூ.69 லட்சம் மோசடி ரேட்டிங் கொடுத்தால் லாபம் என டாக்டரிடம் ரூ.69 லட்சம் மோசடி
ரேட்டிங் கொடுத்தால் லாபம் என டாக்டரிடம் ரூ.69 லட்சம் மோசடி
ரேட்டிங் கொடுத்தால் லாபம் என டாக்டரிடம் ரூ.69 லட்சம் மோசடி
ரேட்டிங் கொடுத்தால் லாபம் என டாக்டரிடம் ரூ.69 லட்சம் மோசடி
ADDED : ஜூலை 31, 2024 12:38 AM
தஞ்சாவூர்:தஞ்சாவூரை சேர்ந்த லெட்சுமி, 62, டாக்டர். கடந்த 23ம் தேதி, இவரது 'வாட்ஸாப்' எண்ணிற்கு, ஆன்லைன் டாஸ்க்கில் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்து, ரேட்டிங் கொடுத்தால் அதிக லாபம் பெறலாம் என மெசேஜ் வந்தது. அந்த லிங்கை தொடர்புகொண்டபோது மர்மநபர் ஒருவர் விவரங்களை லெட்சுமியிடம் எடுத்துரைத்தார்.
அதில், ஆன்லைன் வழியாக ஸ்டார் ஹோட்டல்களின் போட்டோகளுக்கு ரேட்டிங் கொடுத்து, அவற்றை ஸ்கீரின்ஷாட் எடுத்து அனுப்பினால், அதிக தொகை கிடைக்கும் என கூறியுள்ளார்.
இதை நம்பிய லெட்சுமி, தொடர்ந்து தன் சுய விவரம், வங்கி கணக்கு போன்றவற்றை மர்ம நபருக்கு அனுப்பியுள்ளார். பின், ஆரம்ப போனஸ் தொகையாக 750 ரூபாய் அவருடைய வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
தொடர்ந்து, டாஸ்க்கிற்காக பல்வேறு தவணையாக 69.70 லட்சம் ரூபாயை மர்ம நபரின் வங்கி கணக்கிற்கு லெட்சுமி அனுப்பியுள்ளார்.
ஆனால், அவருக்கு உரிய லாபத்தொகை கிடைக்கவில்லை. ஏமாற்றப்பட்டதை உணர்ந்த லெட்சுமி புகாரின்படி, தஞ்சாவூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.