Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/ கல்லணை கால்வாயை முழுமையாக திறக்க வலியுறுத்தி விவசாயிகள் மறியல் 

கல்லணை கால்வாயை முழுமையாக திறக்க வலியுறுத்தி விவசாயிகள் மறியல் 

கல்லணை கால்வாயை முழுமையாக திறக்க வலியுறுத்தி விவசாயிகள் மறியல் 

கல்லணை கால்வாயை முழுமையாக திறக்க வலியுறுத்தி விவசாயிகள் மறியல் 

ADDED : ஆக 02, 2024 10:16 PM


Google News
Latest Tamil News
தஞ்சாவூர்:மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக ஜூலை 28லும், தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையில் இருந்து 31லும் தண்ணீர் திறக்கப்பட்டது. கல்லணையில் இருந்து நேற்று காவிரியில் 8,108 கனஅடி, வெண்ணாற்றில் 2,014 கனஅடி, கல்லணை கால்வாயில் 1,500 கனஅடி, கொள்ளிடம் ஆற்றில் 25,524 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

இந்நிலையில், கல்லணை கால்வாயில் முழு கொள்ளவான 4,000 கனஅடி தண்ணீரை திறக்க வேண்டும்; ஏரி, குளங்களை நிரப்ப வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இரண்டு நாட்களாகியும் கல்லணை கால்வாயில் குறைந்த அளவிலான தண்ணீர் திறப்பதை கண்டித்து, தஞ்சாவூர் மாவட்டம் வெட்டிக்காடு பகுதியில் விவசாயிகள் நேற்று திருவோணம் - வெட்டிக்காடு சாலையில் டிராக்டருடன் திடீரென மறியல் செய்தனர்.

மேலும், கொள்ளிடம் ஆற்றில் அதிகளவு கரைபுரண்டு ஓடுவதால், கடலில் தண்ணீர் வீணாக கலப்பதாக தெரித்து, கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திருவோணம் தாசில்தார் முருகவேல், நீர்வளத்துறை அலுவலர்கள், போலீசார் ஆகியோர் விவசாயிகளிடம் பேச்சு நடத்தினர்.

இதில், கடைமடை வரை முழுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தின்படி, மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்திய கம்யூ., மாவட்ட செயலர் உத்திராபதி கூறியதாவது:

கல்லணை கால்வாயில் குறைந்த அளவு தண்ணீர் எடுப்பதால் யாருக்கும் பயன் இல்லை. கொள்ளிடத்தில் வீணாகும் தண்ணீரை கல்லணை கால்வாயில் திறந்தால் பயன் உள்ளதாக இருக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us