Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/ வறண்ட ஆற்றில் தண்ணீர் வேண்டி விவசாயிகள் காவிரி அன்னைக்கு பூஜை

வறண்ட ஆற்றில் தண்ணீர் வேண்டி விவசாயிகள் காவிரி அன்னைக்கு பூஜை

வறண்ட ஆற்றில் தண்ணீர் வேண்டி விவசாயிகள் காவிரி அன்னைக்கு பூஜை

வறண்ட ஆற்றில் தண்ணீர் வேண்டி விவசாயிகள் காவிரி அன்னைக்கு பூஜை

ADDED : ஜூன் 15, 2024 11:20 PM


Google News
Latest Tamil News
தஞ்சாவூர்:காவிரி ஆற்றில் தண்ணீர் வர வேண்டும் என, தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு காவிரி ஆற்றில், விவசாயிகள் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.

காவிரிதாய் இயற்கை வழி வேளாண் உழவர்கள் அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர் தங்கரசு தலைமையில், நேற்று மேட்டூர் அணையில் தண்ணீர் நிரம்ப மழை வேண்டி, காவிரித்தாய் என்ற எழுத்து பொறித்த மாப்பிள்ளை சம்பா நாற்றினை வைத்து, காவிரித்தாய் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து வழிபட்டனர்.

பின்னர், காவிரி அன்னை உருவச்சிலைக்கு பால்,மஞ்சள் கொண்டு பூஜைகள் நடத்தி, படையிலிட்டு சிறப்பு வழிபாடு நடத்தினர். இதில் பல்வேறு விவசாயிகள் கலந்து கொண்டனர்.

தங்கரசு நிருபர்களிடம் கூறியதாவது: காவிரி ஆற்றில் கடந்த ஆண்டு இரு கரையும் தொட்டபடி தண்ணீர் ஓடியதை மலர் துாவி மேளதாள வாத்தியத்துடன் வரவேற்றோம். ஆனால், இந்தாண்டு காவிரி ஆறு வறண்டுபாலைவனமாக காட்சி அளிக்கிறது.

தமிழக அரசு உரிய காவிரி நீரை கேட்டு பெறாவிட்டாலும், மத்திய அரசு பெற்றுக்கொடுக்கும் இடத்தில் இருந்தும் கண்டு கொள்ளாமல் இருப்பதை கண்டிக்கிறோம்.

யாரிடமும் கேட்டும் பயன் இல்லாத சூழலில், மேட்டூர் அணை பகுதியில் மழை பொழிந்து, தண்ணீர் நிரம்பி காவிரியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓட வேண்டும் என்பதற்காக, காவிரித் தாய்க்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us