/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/ வீதிகளில் வழிந்தோடும் கழிவு நீர் மக்களுடன் கவுன்சிலர் மறியல் வீதிகளில் வழிந்தோடும் கழிவு நீர் மக்களுடன் கவுன்சிலர் மறியல்
வீதிகளில் வழிந்தோடும் கழிவு நீர் மக்களுடன் கவுன்சிலர் மறியல்
வீதிகளில் வழிந்தோடும் கழிவு நீர் மக்களுடன் கவுன்சிலர் மறியல்
வீதிகளில் வழிந்தோடும் கழிவு நீர் மக்களுடன் கவுன்சிலர் மறியல்
ADDED : ஜூலை 24, 2024 10:30 PM

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாநகராட்சியில், பாதாள சாக்கடை திட்டத்தில், குழாய்களில் அடைப்பு ஏற்படுவதை சரி செய்ய சுமார் 10,000த்துக்கும் மேற்பட்ட 'மேன்ஹோல்' அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழிகளில் பொருத்தப்பட்டுள்ள மூடி வழியாக ஆங்காங்கே அவ்வப்போது சாக்கடை கழிவு நீர் சாலையில் வழிந்தோடி வருகிறது.
இந்நிலையில், 36வது வார்டு பூக்காரத்தெரு பகுதியில், கடந்த ஓராண்டுக்கு மேலாக, பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு, மேன்ஹோல் வழியாக, கழிவுநீர் பூக்காரத்தெரு, பூக்கார முஸ்லிம்தெரு, மாதா கோவில் தெரு சாலையில் ஓடுவதால் பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து நேற்று அந்த வார்டு அ.ம.மு.க. கவுன்சிலர் கண்ணுக்கினியாள் தலைமையில் பொதுமக்களுடன், மேரீஸ்கார்னர் பகுதியில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த தெற்கு போலீசார், மாநகராட்சி பணியாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட கவுன்சிலரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதனால், போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். அப்பகுதியில் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.