/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/ சர்வதேச தடகள போட்டிக்கு தேர்வான மாணவிக்கு பாராட்டு சர்வதேச தடகள போட்டிக்கு தேர்வான மாணவிக்கு பாராட்டு
சர்வதேச தடகள போட்டிக்கு தேர்வான மாணவிக்கு பாராட்டு
சர்வதேச தடகள போட்டிக்கு தேர்வான மாணவிக்கு பாராட்டு
சர்வதேச தடகள போட்டிக்கு தேர்வான மாணவிக்கு பாராட்டு
ADDED : ஜூன் 28, 2024 11:59 PM

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம் வெண்டயம்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட நாவலுார் கிராமத்தைச் சேர்ந்த ஜெயசங்கர் - தனலெட்சுமி தம்பதியின் மகள் சுவேதா, 18, திருச்சியில் உள்ள கல்லுாரியில் பி.பி.ஏ., இரண்டாம் ஆண்டு படிக்கிறார்.
மாநில அளவிலான ஜூனியர் பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் போட்டியில் தங்கம் வென்ற இவர், ஜம்மு - காஷ்மீரில் இம்மாதம் நடந்த போட்டியில் தங்கம் வென்றார்.
தற்போது, நேபாள நாட்டில், விரைவில் நடக்கவிருக்கும், சர்வதேச அளவிலான தடகளப் போட்டிக்கு இவர் தேர்வாகியுள்ளார்.
இதையடுத்து, கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தின் போது, கலெக்டர் தீபக் ஜேக்கப், மாணவி பெற்ற தங்க பதக்கங்களையும், சான்றிதழ்களையும் பார்த்து பாராட்டினார்.
மேலும், சர்வதேச அளவிலான போட்டிக்குச் செல்லும் அவருக்கு வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
இதுகுறித்து சுவேதா கூறியதாவது:
நான் அரசு பள்ளியில் படித்த மாணவி. என் தந்தை விவசாயி. இருப்பினும் என் விளையாட்டு ஆர்வத்திற்கு உறுதுணையாக இருந்தார். சர்வதேச அளவிலான போட்டிக்கு தேர்வான என்னை, கலெக்டர் பாராட்டியது ஊக்கம் அளிக்கும் வகையில் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.