/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/ 'ஏ.ஐ., தொழில்நுட்பம் வாயிலாக சமூகத்தை முன்னேற்ற வேண்டும்' 'ஏ.ஐ., தொழில்நுட்பம் வாயிலாக சமூகத்தை முன்னேற்ற வேண்டும்'
'ஏ.ஐ., தொழில்நுட்பம் வாயிலாக சமூகத்தை முன்னேற்ற வேண்டும்'
'ஏ.ஐ., தொழில்நுட்பம் வாயிலாக சமூகத்தை முன்னேற்ற வேண்டும்'
'ஏ.ஐ., தொழில்நுட்பம் வாயிலாக சமூகத்தை முன்னேற்ற வேண்டும்'
ADDED : ஜூலை 23, 2024 08:01 PM

தஞ்சாவூர்:தஞ்சாவூரில், மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின், மக்கள் தொடர்பகம் சார்பில், மூன்று நாட்கள் மக்கள் நலத்திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி நேற்று துவங்கியது. இதனை பத்திரிக்கை தகவல் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் அண்ணாதுரை, மாநகராட்சி மேயர் ராமநாதன் துவக்கி வைத்தனர். இதில், மத்திய, மாநில அரசின் திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், அண்ணாதுரை பேசியதாவது:
அரசு திட்டங்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில், ஒருங்கிணைந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. மாணவர்கள் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வுடன் இருந்து பயனடைய வேண்டும்; செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, சமூகத்தை முன்னேற்ற பாதையில் எடுத்துச் செல்ல வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சார்பில், 11 மகளிர் சுய உதவி குழுவினருக்கு ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான கடனுதவி வழங்கப்பட்டது.