/உள்ளூர் செய்திகள்/தென்காசி/லாரி - கார் நேருக்கு நேர் மோதல்: 6 பேர் பலிலாரி - கார் நேருக்கு நேர் மோதல்: 6 பேர் பலி
லாரி - கார் நேருக்கு நேர் மோதல்: 6 பேர் பலி
லாரி - கார் நேருக்கு நேர் மோதல்: 6 பேர் பலி
லாரி - கார் நேருக்கு நேர் மோதல்: 6 பேர் பலி
ADDED : ஜன 28, 2024 10:45 AM

தென்காசி: தென்காசி அருகே சிமெண்ட் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில், புளியங்குடியை சேர்ந்த ஆறு பேர் உயிரிழந்தனர்.
தென்காசி மாவட்டம் புளியங்குடி பகவதி அம்மன் கோயில் தெருவை சார்ந்தவர்கள் கார்த்திக், வேல் மனோஜ், சுப்பிரமணி, மனோகரன், போத்திராஜ் உள்ளிட்ட ஆறு பேர் காரில் குற்றாலத்திற்கு குளிக்க புறப்பட்டனர்.
குற்றாலத்தில் குளித்துவிட்டு புளியங்குடி நோக்கி திரும்பிக் கொண்டிருந்த பொழுது, சிங்கிலிப்பட்டில் கேரள மாநிலத்திற்கு சிமெண்ட் ஏற்றிச் சென்ற லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் காரில் பயணம் செய்த புளியங்குடியை சேர்ந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.