/உள்ளூர் செய்திகள்/தென்காசி/ தென்காசியில் ரசாயன பவுடர் பால் விற்பனை 3 பேரிடம் விசாரணை தென்காசியில் ரசாயன பவுடர் பால் விற்பனை 3 பேரிடம் விசாரணை
தென்காசியில் ரசாயன பவுடர் பால் விற்பனை 3 பேரிடம் விசாரணை
தென்காசியில் ரசாயன பவுடர் பால் விற்பனை 3 பேரிடம் விசாரணை
தென்காசியில் ரசாயன பவுடர் பால் விற்பனை 3 பேரிடம் விசாரணை
ADDED : ஜூன் 14, 2025 06:15 AM

தென்காசி: பாலில் ரசாயன பவுடர் கலந்து விற்பனை செய்த கணவன், மனைவி உட்பட 3 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தென்காசி மாவட்டம் மேலப்பாவூர், குலசேகரபட்டியை சேர்ந்தவர் கோமதி சங்கர் 49. மனைவி லட்சுமி 40. இருவரும் தென்காசி ரயில்வே ஸ்டேஷன் அருகே 3 ஆண்டுகளாக பால் விற்பனை செய்து வருகின்றனர்.
இவர்கள் ரசாயன பவுடரை தண்ணீரில் கலந்து அதிக அளவில் பாலை தயாரித்து விற்பனை செய்தது தெரியவந்தது. அந்த பால் பல நாட்கள் கெட்டுப் போகவில்லை. தென்காசி நகரில் ஏராளமான கடைகளுக்கு விற்பனை செய்து வந்தனர்.
இது பற்றி புகாரின் பேரில் தென்காசி உணவு பாதுகாப்புத்துறை ஆய்வாளர் முகம்மது முசப், அதிகாரிகள் பால் கடையில் ஆய்வு மேற்கொண்டனர்.அங்கு பெயர் குறிப்பிடாத, அதில் என்னென்ன அடங்கியிருக்கின்றன என்பதையும் குறிப்பிடாத ரசாயன பவுடர் பாக்கெட்டுகள் இருந்தன.
அவை பாலை 'திக்'காக வைத்திருப்பதற்கும் நீண்ட நாள் கெடாமல் இருக்கவும் செய்கின்றன.
அவருக்கு அந்த ரசாயன பவுடர் பாக்கெட்டுகளை சப்ளை செய்த மேலப்பாவூரை சேர்ந்த முப்பிடாதி 45, என்பவரையும் போலீசார் பிடித்து விசாரித்தனர். ரசாயன பவுடர், பால் மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. பரிசோதனை முடிவு வந்த பிறகுதான் மூவரும் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.