/உள்ளூர் செய்திகள்/தென்காசி/ குற்றாலத்தில் முன்னதாக துவங்கியது சீசன் குற்றாலத்தில் முன்னதாக துவங்கியது சீசன்
குற்றாலத்தில் முன்னதாக துவங்கியது சீசன்
குற்றாலத்தில் முன்னதாக துவங்கியது சீசன்
குற்றாலத்தில் முன்னதாக துவங்கியது சீசன்
ADDED : மே 21, 2025 02:57 AM

தென்காசி:தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்ய துவங்கி விட்டதால் குற்றாலத்தில் சீசனும் முன்கூட்டியே துவங்கிவிட்டது.
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் 2 நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை பெய்து வருகிறது. பாபநாசம், சேர்வலாறு அணைகளின் நீர் பிடிப்பு பகுதிகளிலும், களக்காடு பகுதியிலும் சாரல் மழை பெய்தது. அதிகபட்சமாக சேர்வலாறில் 3 மி.மீ., மழை பெய்தது.
தென்காசி :
தென்காசி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை சீசன் துவங்கி விட்டது.
செங்கோட்டை சுற்றுவட்டார பகுதி, அடவிநயினார், கருப்பாநதி அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தது. அதிகபட்சமாக அடவிநயினார் அணையில் 21 மி.மீ., மழை பதிவாகியது. கருப்பாநதியில் 13.50 மி.மீ., சிவகிரி, செங்கோட்டையில் தலா 10 மி.மீ., மழை பெய்தது.
தொடர்ந்து சாரல் மழை பெய்ய தொடங்கி உள்ளது.
கடனா, ராமநதி, குண்டாறு அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் சாரல் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. தென்காசி, சங்கரன்கோவிலில் லேசான சாரல் பெய்தது.
சீசன் துவங்கியது:
குற்றாலத்தில் ஆண்டு தோறும் ஜூன் மாதம் துவங்கும் சீசன் 3 மாதங்களுக்கு களைக்கட்டும். இந்த ஆண்டு சற்று முன்னதாக மே 15ல் இருந்து தென்மேற்கு பருவக்காற்று வீசத் துவங்கி விட்டது. நேற்று முன்தினம் குற்றாலத்தில் அருவிகளில் அதிக தண்ணீர் கொட்டியது. நேற்று காலையும் குளிக்கும் அளவு தண்ணீர் விழுந்தது. சிறிது நேரம் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. பின்னர் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். குற்றால சீசன் முன்னதாக துவங்கியதால் விடுமுறை காலம் என்பதால் பயணிகள் குவியத் துவங்கியுள்ளனர்.