ADDED : ஜூன் 21, 2025 02:49 AM

தென்காசி:கடையநல்லுாரில் டூவீலரில் பதுங்கிய பாம்பை தீயணைப்பு வீரர்கள் மீட்டு வனத்தில் விட்டனர்.
தென்காசி மாவட்டம் கடையநல்லுார் மெயின் பஜாரில் சுபேர் என்பவர் பழைய டூவீலர்கள் விற்பனையகம் நடத்தி வருகிறார். அங்கு நிறுத்தப்பட்டிருந்த டூவீலர் ஒன்றில் நேற்று காலை நாகப்பாம்பு பதுங்கியிருந்தது. தீயணைப்பு வீரர்கள்
டூவீலரை பிரித்து உள்ளே பதுங்கி இருந்த நான்கு அடி நீள பாம்பை லாவகமாக பிடித்தனர். பின்னர் அதனை வனத்திற்குள் விட்டனர்.