ADDED : ஜூன் 01, 2025 01:56 AM
கெலமங்கலம், கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை யாரப் நகர் கீழ்கோட்டையை சேர்ந்தவர் சதாம், 26. டிரைவர். இவர் மனைவி ஐஷூ, 24. கெலமங்கலம் சுல்தான்பேட்டையில் வசிக்கின்றனர். இவர்களுக்கு, 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஐஷூவிற்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்,
ஆண் குழந்தை பிறந்தது.நேற்று முன்தினம் அதிகாலை, 3:00 மணிக்கு, குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து தாய் துாங்க வைத்தார். காலை, 8:05 மணிக்கு பார்த்த போது, குழந்தை மயங்கிய நிலையில் இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், கெலமங்கலம் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர், குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தார். கெலமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.