Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தென்காசி/நிபா வைரஸ் தொற்று:சோதனை சாவடியில் சுகாதாரத்துறை தீவிர கண்காணிப்பு

நிபா வைரஸ் தொற்று:சோதனை சாவடியில் சுகாதாரத்துறை தீவிர கண்காணிப்பு

நிபா வைரஸ் தொற்று:சோதனை சாவடியில் சுகாதாரத்துறை தீவிர கண்காணிப்பு

நிபா வைரஸ் தொற்று:சோதனை சாவடியில் சுகாதாரத்துறை தீவிர கண்காணிப்பு

ADDED : ஜூலை 23, 2024 09:39 PM


Google News
செங்கோட்டை,:கேரளாவில் நிபா வைரஸ் தொற்று பரவல் காரணமாக, புளியரை சோதனை சாவடியில் சுகாதாரத்துறை சார்பில் தீவிர கண்காணிப்பு நடத்தப்பட்டு வருகிறது. அனைத்து வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.

கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், பாண்டிக்கோடு பகுதியில் வசித்து வந்த 14 வயது சிறுவன் திடீரென காய்ச்சலால் பலியானான். அவனது ரத்த மாதிரி சோதனையில், நிபா வைரஸ் தொற்று இருப்பது தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து, மத்திய சுகாதார துறையினர், உடனடியாக கேரளா விரைந்து, சிறுவனுடன் தொடர்பில் இருந்த மற்ற சிறுவர்களையும் சோதனை செய்தனர். சோதனையில், 6 சிறுவர்களுக்கு நிபா வைரஸ் தொற்று அறிகுறி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, கேரளாவை ஒட்டியுள்ள அண்டை மாநிலங்களின் உள்ள அனைத்து மாநில எல்லைகளும் தற்போது தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம், தமிழக- கேரளா எல்லை பகுதியில் உள்ள புளியரை பகுதியில் நிபா வைரஸ் சோதனை சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் அனைத்து வகை வாகனங்களையும் முறையாக சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. கேரளாவில் இருந்து வரும் நபர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. காய்ச்சல் அறிகுறி தென்பட்டால், அவர்களை அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புளியரை பகுதியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்ட தமிழக--கேரள எல்லையான புளியரை பகுதி சுகாதாரத் துறை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மாவட்டத்தில் யாருக்காவது காய்ச்சல் அறிகுறி இருந்தால், அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும் என சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us