Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தென்காசி/ நான்கு அரசு மருத்துவமனைகளில் கீரை வாங்கியதில் மோசடி குறித்து விசாரணை

நான்கு அரசு மருத்துவமனைகளில் கீரை வாங்கியதில் மோசடி குறித்து விசாரணை

நான்கு அரசு மருத்துவமனைகளில் கீரை வாங்கியதில் மோசடி குறித்து விசாரணை

நான்கு அரசு மருத்துவமனைகளில் கீரை வாங்கியதில் மோசடி குறித்து விசாரணை

ADDED : ஜூன் 18, 2025 10:25 PM


Google News
தென்காசி:தென்காசி மாவட்டத்தில் 4 அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு ஒரு கட்டு கீரை ரூ.20க்கு பதிலாக ரூ.80 முதல் 100க்கு வாங்கியதாக கணக்கு எழுதி மோசடி செய்த அலுவலர்கள் மீது விசாரணை நடக்கிறது.

தென்காசி தலைமை மருத்துவமனையில் நோயாளிகளுக்கு மூன்று வேளை உணவு வழங்கப்படுகிறது. இதில் கீரை தனியார் ஒப்பந்ததாரர்களிடம் வாங்குகின்றனர். ஒரு கட்டு கீரைக்கு அதிகபட்சம் ரூ.30 என அரசு விலை நிர்ணயம் செய்துள்ளது. அலுவலர்கள் ஒரு கட்டு கீரையை ரூ. 80 முதல் ரூ. 100 வரை கொடுத்து வாங்கியதாக கணக்கு எழுதி ரூ.6 லட்சத்து 59 ஆயிரம் மோசடி செய்தது தணிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே தென்காசி மருத்துவமனையில் முன்னர் நிர்வாக அலுவலராக இருந்த ஸ்ரீ பத்மாவதி , கடந்த மே 30 ல் ஓய்வு பெறும் நாளில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இந்நிலையில் கடையநல்லுாரை சேர்ந்த சமூக ஆர்வலர் மகேஷ்பாண்டியன் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி,தென்காசி மாவட்டம் புளியங்குடி, சிவகிரி, கடையநல்லுார், சங்கரன்கோவில் ஆகிய நான்கு அரசு மருத்துவமனைகளில் கடந்த ஐந்து ஆண்டுகளில் கீரை எவ்வளவு விலைக்கு வாங்கப்பட்டுள்ளது என தகவல் கேட்டிருந்தார். ரூ. 20 முதல் ரூ. 30 வரை விலை நிர்ணயிக்க வேண்டிய கீரைக்கு ஒரு கட்டுக்கு ரூ.88 வரை கணக்கு எழுதியது தற்போது தரப்பட்டுள்ள தகவலில் தெரியவந்துள்ளது.

இது குறித்து தமிழக அரசின் பொது சுகாதாரச் செயலர் மற்றும் மருத்துவம், ஊரக நல பணிகள் இயக்குனருக்கு புகார் அனுப்பி இருந்தார். இதையடுத்து கடந்த ஐந்தாண்டுகளில் இங்கு நடந்த நிதி மோசடி குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us