/உள்ளூர் செய்திகள்/தென்காசி/ வளர்ப்பு நாய் இறந்த சோகம் விவசாயி தற்கொலை வளர்ப்பு நாய் இறந்த சோகம் விவசாயி தற்கொலை
வளர்ப்பு நாய் இறந்த சோகம் விவசாயி தற்கொலை
வளர்ப்பு நாய் இறந்த சோகம் விவசாயி தற்கொலை
வளர்ப்பு நாய் இறந்த சோகம் விவசாயி தற்கொலை
ADDED : ஜூன் 07, 2025 02:20 AM

தென்காசி:சங்கரன்கோவில் அருகே வளர்ப்பு நாய் இறந்த சோகத்தில் இருந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லுார் அருகே சென்னிகுளத்தை சேர்ந்தவர் பெருமாள் 40, விவசாயி. இவர்
வீட்டில் கடந்த 3 ஆண்டுகளாக ஒரு நாயை செல்லமாக வளர்த்து வந்தார். எப்போதும் அவருடனேயே இருக்கும். தோட்டத்திற்குள் உடன் சென்று வரும். இந்த நாய் உடல் நலம் பாதித்து திடீரென இறந்துவிட்டது. அதில் இருந்து பெருமாள் மன உளைச்சலில் இருந்தவர் வீட்டில் விஷம் குடித்து மயங்கினார். திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் இறந்தார். கரிவலம்வந்தநல்லுார் போலீசார் விசாரித்தனர்.