/உள்ளூர் செய்திகள்/தென்காசி/ தென்காசி அருகே மின்சாரம் பாய்ந்து 5 வயது சிறுமி பலி தென்காசி அருகே மின்சாரம் பாய்ந்து 5 வயது சிறுமி பலி
தென்காசி அருகே மின்சாரம் பாய்ந்து 5 வயது சிறுமி பலி
தென்காசி அருகே மின்சாரம் பாய்ந்து 5 வயது சிறுமி பலி
தென்காசி அருகே மின்சாரம் பாய்ந்து 5 வயது சிறுமி பலி
ADDED : மே 24, 2025 09:31 PM

தென்காசி : தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கடங்கநேரியை சேர்ந்தவர் முருகன் 65. இவரது மகள் இலக்கியா, துாத்துக்குடியில் கணவர் மணிகண்டனுடன் வசிக்கிறார்.
இலக்கியாவின் 5 வயது மகள் ஜெமித்ரா ராணி, கடங்கநேரியில் தாத்தா முருகன் வீட்டிற்கு வந்திருந்தார். நேற்று காலை ஜெமித்ரா ராணி அங்குள்ள கைகொண்டார் தெரு, வயல்பகுதியில் விளையாடி கொண்டிருந்தார். அப்போது அவளுடன் அதே பகுதியை சேர்ந்த மாரியப்பன் மகள் பிரதிக்ஷா 9, வும் விளையாடிக்கொண்டிருந்தார். நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால் 2 மின்கம்பங்கள் சாய்ந்து கிடந்தன.
இதனால் வயல்களுக்கு செல்ல வேண்டிய மின்சாரத்தை நிறுத்தி தற்காலிகமாக கடங்கநேரி கிராமத்திற்கு மட்டும் மின்ஊழியர்கள் இரவில் மின்சப்ளை வழங்கியிருந்தனர்.
நேற்று காலை அந்த பகுதியில் 2 சிறுமிகளும் விளையாடிக்கொண்டிருந்த நிலையில், சாய்ந்து கிடந்த மின்கம்பத்தின் ஸ்டே கம்பியை ஜெமித்ரா ராணி பிடித்தார்.
அப்போது அதில் மின்கசிவு ஏற்பட்டு ஜெமித்ரா ராணி உடலில் மின்சாரம் பாய்ந்தது. இதில் துாக்கிவீசப்பட்ட சிறுமி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
பிரதிக்ஷா அந்த கம்பியை பிடித்ததில் துாக்கி வீசப்பட்டு மயக்கமுற்றார். ஊத்துமலை போலீசார் ஜெமித்ரா ராணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரதிக்ஷாவை தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஊத்துமலை போலீசார் விசாரிக்கின்றனர்.