திருநெல்வேலி:தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே புளியரையை சேர்ந்த கருப்பசாமி மகன் மணிகண்டன் 40. அங்குள்ள கிராம வங்கியில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தார். இவருக்கு மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். நேற்று முன்தினம் விருதுநகரில் உள்ள வங்கியின் தலைமை அலுவலகத்திற்கு டூவீலரில் சென்றார்.
திருநெல்வேலிக்கு வரும் வழியில் தாழையூத்தில் மதுபானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். தாழையூத்து போலீசார் விசாரித்தனர். கடன் பிரச்னையில் தற்கொலை செய்திருக்கலாம் என தெரிகிறது.