ADDED : ஜூலை 02, 2024 08:59 PM
தென்காசி:தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் 5ம் வகுப்பு மாணவன் மதிய உணவு சாப்பிட்ட பிறகு வாந்தியெடுத்து உயிரிழந்தார்.
செங்கோட்டை காமாட்சி தெருவை சேர்ந்தவர் செல்வகுமார். இவரட்ஜி மகன் அசோக்குமார்,9. செங்கோட்டை கச்சேரி காம்பவுண்ட் நடுநிலைப் பள்ளியில் 5ம் வகுப்பு படித்தான். நேற்று முன் தினம் மதியம் பள்ளியில், வீட்டில் இருந்து கொண்டு வந்த சாம்பார் சாதம் சாப்பிட்டான். அதைத்தொடர்ந்து அசோக்குமாருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது.
தகவல் அறிந்து பெற்றோர் வந்து, செங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு வலிப்பு ஏற்பட்டது. மேல்சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் கொண்டு சென்றனர். செல்லும் வழியில் அசோக்குமார் உயிரிழந்தான்.
செங்கோட்டை அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கவில்லை எனக் குற்றம்சாட்டி அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அரசு மருத்துவமனை முன் போராட்டம் நடத்தினர்.