ADDED : ஜூலை 14, 2024 01:49 AM
தென்காசி:தென்காசி மாவட்டம், கடையநல்லுார் அருகே சொக்கம்பட்டி வலையர் குடியிருப்பைச் சேர்ந்தவர் மூக்கையா, 60; மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள பிள்ளையார் பாண்டியன் என்பவரின் தோட்டத்தில் காவலாளியாக பணிபுரிந்தார்.
அப்பகுதியில் இரவில் காட்டு யானைகள் உணவு தேடி வந்தன. தோட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பிள்ளையார் பாண்டியன், காவலாளிகள் மூக்கையா, முருகையா காவல் இருந்தனர்.
நள்ளிரவு 12:00 மணிக்கு காட்டு யானை உள்ளே வந்தது. யானையை விரட்ட மூக்கையா சென்றார். யானை அவரை மிதித்தது; சம்பவ இடத்திலேயே இறந்தார்.
நேற்று காலை கடையநல்லுார் வனச்சரக அலுவலர் சுரேஷ் தலைமையிலான வனத்துறையினர், மூக்கையா உடலை மீட்டனர். இறந்த மூக்கையாவிற்கு மனைவி, மூன்று மகள்கள் உள்ளனர்.
மூக்கையா உறவினர்கள் அவரது இறப்பிற்கு வனத்துறை உரிய இழப்பீடு வழங்கக்கோரி மறியலில் ஈடுபட்டனர். புளியங்குடி போலீசார், வனத்துறையினர் பேச்சு நடத்தினர்.