ADDED : செப் 04, 2025 11:45 PM
தேவகோட்டை: தே பிரித்தோ மேல் நிலைப் பள்ளியில் எழுத்தாளர் இயக்கம் சார்பில் எண்ணும் எழுத்தும் எனும் தலைப்பில் பயிலரங்கம் நடந்தது.
தாளாளர் சேவியர் ராஜ் தலைமை வகித்தார். பொறுப்பு ஆசிரியர் ஸ்டீபன் மிக்கேல் ராஜ் முன்னிலை வகித்தார். செயலாளர் தேவஹரீஸ் வரவேற்றார். பொறுப் பாசிரியர் பிலவேந்திரராஜா தொடக்க உரை யாற்றினார். ஆசிரியர் எட்வர்ட் லெனின் பயிலரங்கம் நோக்கம் பற்றி பேசினார். எழுத்தாளர் பெரியய்யா மாணவர் களுக்கு பரிசு வழங்கினார்.
முன்னாள் தமிழா சிரியர் தமிழ்ச்செல்வன், த.மு.எ.க.சங்க மாவட்ட செயலாளர் அன்பரசன், என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர் ஜெயசீலன் பங்கேற்றனர்.
மாணவர் இயக்க தலைவர் பரந்தாமன் தொகுத்து வழங்கினார்.