/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ உலக அருங்காட்சியக தின ஓவியப் போட்டி உலக அருங்காட்சியக தின ஓவியப் போட்டி
உலக அருங்காட்சியக தின ஓவியப் போட்டி
உலக அருங்காட்சியக தின ஓவியப் போட்டி
உலக அருங்காட்சியக தின ஓவியப் போட்டி
ADDED : மே 19, 2025 05:50 AM
திருப்புத்தூர் : திருப்புத்தூர் அருகே ந.வைரவன்பட்டி அருங்காட்சியகத்தில் உலக அருங்காட்சியக தினத்தை முன்னிட்டு ஓவியப் போட்டி நடந்தது.
போட்டிகள் செட்டிநாடு பாரம்பரிய கட்டடம், இந்திய அருங்காட்சியகம், சுற்றுலாத் தலங்கள் என்ற தலைப்புகளில் நடந்தது. நடுநிலை, மேல்நிலை பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். பாரதி இலக்கிய கழக மாவட்ட தலைவர் ஜெயச்சந்திரன் துவக்கினார். மாலதி பழனியப்பன் வரவேற்றார்.
50க்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றனர். நடுவர்களாக ஓவியர்கள் நாகராஜன், கணேசன், பிரபு ஆகியோர் தேர்வு செய்தனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட சுற்றுலா அலுவலர் திருவரசன் சான்றுகளை வழங்கினார். ஜெயராஜ் ஒருங்கினைத்தார்.