ADDED : மார் 28, 2025 05:27 AM
சிவகங்கை : பூலாங்குறிச்சி அருகே அதிரம்பட்டியைச் சேர்ந்தவர் வெள்ளையன். இவர் கடந்த 20 அன்று பண்ணை வேலைக்கு சென்றார். அவரது வீட்டில் இருந்த சாவியை யாரோ எடுத்து பீரோவில் இருந்த பத்தரை பவுன் தங்க நகைகளை திருடியுள்ளனர்.
வெள்ளையன் பூலாங்குறிச்சி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தில் அவரது வீட்டின் அருகே வசிக்கு பெண் ஒருவர் சாவியை எடுத்து திருடியது தெரியவந்தது. அந்த பெண்ணை கைது செய்த போலீசார் நகையை பறிமுதல் செய்தனர்.